ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன் விழாவுக்கு, தி முதலியார் எஜூகேசனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தார்.
இதையடுத்து கல்லூரியின் 50 -ஆவது ஆண்டு விழா இலச்சினை(எம்பளம்) வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கல்லூரியில் புதிதாக பிஎஸ்சி (விசுவல் கம்யூனிகேசன்), பிஎஸ்சி (நியூட்ரிசன் அன்ட் டயட்டிக்ஸ்), பிஏ (டிபன்ஸ் அன்ட் ஸ்டர்டஜிக் ஸ்டடிஸ்), பிஏ (பொலிடிக்கல் சயின்ஸ்-தமிழ் வழி) ஆகிய 4 இளங்கலை புதிய பாடப்பிரிவுகள் தொடக்கி வைக்கப்பட்டது.
இதில்,கல்லூரியின் பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், ராமசந்திரன், ரவிச்சந்திரன், இணை செயலாளர் அருண்குமார் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரியின் இயக்குநர் வெங்கடாசலம் வரவேற்றார். முடிவில் கல்லூரியின் முதல்வர் சங்கரசுப்ரமணியன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக சின்னத்திரை புகழ் புதுக்கோட்டை செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி பேராசிரியை, பேராசிரியர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ,மாணவிகள் உட்பட ஏராளனமானோர் கலந்து கொண்டனர்.