Close
நவம்பர் 25, 2024 3:10 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…வில்லியம் ஷேக்ஸ்பியரின்… தி டெம்பஸ்ட்

அலமாரியிலிருந்து

வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி டெம்பெஸ்ட்

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்…

தி டெம்பஸ்ட் என்கிற படைப்பு வில்லியம் ஷேக்ஸ்பியரின் கடைசி நாடகமாக கருதப்படுகிறது. நாடகம் நிகழ்த்தப்பட்ட காலம் 1611. இது ஷேக்ஸ்பியர் எழுதிய கடைசி நாடகமாக இருக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை.

இந்த நாடகத்திற்கு பிறகான அவரது பிற்கால படைப்புகளில், நாடக பாணியிலான எழுத்து பணியிலிருந்து விடைபெற போகிறார், நாடகங்கள் எழுதுவதை விரைவில் நிறுத்துவார் என்பதை ஷேக்ஸ்பியர் உட்பட அவரது பிரியர்கள் கூட உணர்ந்திருக்கவில்லை.

ஆனால் சில வாசகர்கள், நாடக ஆர்வலர்கள் பிரோஸ்பெரோ, இந்த நாடகத்தில் அவரது இறுதி விடைகளை வழங்கும்போது, உண்மையில் ஷேக்ஸ்பியர் தனது பார்வையாளர்களுக்கு விடைகொடுக்கிறார் என்று கணித்திருந்தார்கள்.

கதையின் கரு மிகவும் எளிமையானது..
பிரோஸ்பெரோ மிலன் தேசத்தின் பிரபு. மந்திர வித்தைகள் தெரிந்தவர். அவர் நினைத்தால் புயலடிக்கும், கடல் கொந்த ளிக்கும், பல அமானுஷ்ய சக்திகள் படைத்தவர். இவருக்கு புத்தகம் படிப்பதில் தான் மிகுந்த ஆர்வம். நாட்டின் ஆட்சி பொறுப்பை தன் சகோதரன் ஆண்டானியோவை கவனிக்க சொல்லிவிட்டு, பெரும்பாலான நேரங்களை நூலகங்களில் செலவழிப்பார்.

மெல்ல மெல்ல ஆண்டோனியோவுக்கு மிலன் தேசத்தின் அரசனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நேபிள்ஸ் நாட்டு அரசன் அலன்ஸோவோடு கூட்டு சேர்ந்து, சதி திட்டம் தீட்டு கின்றனர். பிராஸ்பரோவை நாடு கடத்துகிறான்.

ஒருநாள் இரவு ஆண்டோனியோவின் ஆட்கள் பிராஸ்பரோ வையும், அவரது இளம் வயது மகள் மிராண்டாவையும், ஒரு பழுதான படகில் ஏற்றி கொந்தளிப்பு மிகுந்த கடல் பகுதியில் விடுகின்றனர். கதை தொடங்கும் முன் நடக்கும் நாடகத்தின் பின்னணி இதுதான்.
அந்த படகு புயலில் சிக்கி, மனித நடமாட்டம் இல்லாத ஒரு தீவில் கரை ஒதுங்குகிறது. அங்கு பல சோதனைகள், திருப் பங்களுக்கு பின், இறுதியில் பிரோஸ்பெரோ மீண்டும் மிலன் நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்வது தான் கதை.
நேபிள்சின் இளவரசன் ஃபெர்டினாண்டுக்கும் மிராண்டா வுக்கும் கண்டதும் காதல் ஏற்படுகிறது.

பிராஸ்பெரோவிற்கு இதில் உடன்பாடில்லை.பெர்டினாண்டின் விசுவாசத்தை சோதிக்க முடிவு செய்கிறார். கடைசியில் மிராண்டா மற்றும் பெர்டினாண்ட் ஆகியோரின் திருமணத் திற்கு ஒத்துக் கொண்டு இளம் ஜோடியை சேர்த்து வைத்து, எதிரிகளுக்கு பாடம் கற்பித்து, அவர்களை மன்னித்து, பிராஸ்பரோ மீண்டும் மிலனின் மன்னராகிறார்.

ஷேக்ஸ்பியரின் மற்ற நாடகங்கள் சிலவற்றை விட, இந்த படைப்பு சற்று இருண்மை பொருந்தியதாக இருப்பினும் நகைச்சுவை நிரம்பியதாக இருக்கிறது. சோகம் அப்பிய துர்மரண சம்பவங்கள் இல்லாமல் திருமண வைபவத்துடன் சுபம் என்கிற இறுதி வாசகத்துடன் நாடகம் இனிதாய் நிறைவுறுகிறது.

சதி, மந்திரம், வெறிச்சோடிய தீவு, துரோகம், நகைச்சுவை மற்றும் காதல் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த படைப்பு.
“Hell is empty and all the devils are here” – நரகம் காலியாக உள்ளது, அனைத்து பிசாசுகளும் இங்கே உள்ளன என்கிற வரிகளை இந்த நாடகத்தில் ஷேக்ஸ்பியர் வைத்திருப்பார். இன்றும் கூட நமக்கு இதை நிறைய இடங்களில் நிறைய தருணங்களில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

 ஷேக்ஸ்பியர் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் நிலை பிறழ்வது பூரணத்துவத்தின் உச்சம் என்று பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது. உணர்ச்சிகாரமான இன்பியல், துன்பியல் நாடகங்கள் பார்வையாளருக்கு, தன் முன் வைக் கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை, அனுபவங்களைதானே பட்டறிவதாக உணர்ந்து கிளர்வடை யும் அளவிற்கு நம்பகத்தன்மையை கொண்டிருத்தல் அவசியம்.

இந்தக் குறிக்கோளை பூர்த்தி செய்வதற்காக நாடகாசிரியர் வெகு துல்லியமாக தனது கதாபாத்திரங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை வரையறை செய்து கொண்டாக வேண்டும். அதை அன்றைய நாடக ஆசிரியர்கள் செவ்வனே செய்து வந்தார்கள். நமது காலத்தில், அற்பமான அறவுணர்வற்ற, அறமற்ற கேளிக்கையாக மட்டுமே இருக்கிறது என்பது வேதனை.

இங்கிலாந்திலிருந்து… சங்கர்🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top