Close
நவம்பர் 22, 2024 11:54 காலை

சாத்தூரில் கலை இலக்கியப் பெருமன்ற மாநாடு தொடங்கியது

கலைஇலக்கிய பெருமன்றம்

சாத்தூரில் தொடங்கிய கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் பேசிய சிறுபான்மை ஆணையத்தலைவர் பீட்டர்அல்போன்ஸ்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாடு சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பெருமன்றத்தின் கொடியை, மூத்த வழிகாட்டிக் குழு உறுப்பினர் பேராசிரியர் தி.சு. நடராசன் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பெருமன்றத்தின் நிறுவனர் ஜீவானந்தம் தொடங்கி முக்கிய ஆளுமைகள் 100 பேரின் படங்கள் மாநாட்டு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தொல்லியல் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சிகளை கொ.மா. கோதண்டம், முனைவர் சேய கணேஷ்ராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அமர்வுக்கு வரவேற்புக் குழுவின் செயலாளர் மருத்துவர் த. அறம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் தொடங்கி வைத்துப் பேசினார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரகுராமன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் எம்ஏசிஎஸ் ரவீந்திரன் முன்னிலை உரை நிகழ்த்தினார். முன்னாள் எம்பி வெ. அழகிரிசாமி வரவேற்றார். முடிவில் முன்னாள் எம்பி பொ. லிங்கம் நன்றி கூறினார்.

தொடக்க அமர்வுகளில் மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் இரா.காமராசு, பொருளாளர் ப.பா. ரமணி, துணைப பொதுச் செயலாளர் ஹாமீம் முஸ்தபா, மாநிலச் செயலாளர் கண்மணி ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாநிலம் முழுவதும் இருந்து 400 பேராளர்கள், 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top