Close
ஏப்ரல் 10, 2025 12:59 காலை

கலைஇலக்கிய பெருமன்ற மாநாட்டு.. இரண்டாம் நாளில் கருத்தரங்கம்

கலை இலக்கிய பெருமன்றம்

கருத்தரங்கில் பேசுகிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ. அரசு.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 21) பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.

தற்காலத் தமிழ் அசைவுகள் என்ற பொதுத்தலைப்பில், நடைபெற்ற கருத்தரங்கின் முதல் அமர்வில், தற்காலத் தமிழ் அசைவுகள்- இலக்கியத்தில் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் வீ. அரசு, அரசியலில் என்ற தலைப்பில் தாமரை இதழாசிரியர் சி. மகேந்திரன், பாலின சமத்துவத்தில் என்ற தலைப்பில் டாக்டர் சாந்தி, ஊடகத்தில் என்ற தலைப்பில் விமர்சகர் ந. முருகேசபாண்டியன், சுற்றுச்சூழலில் என்ற தலைப்பில் சூழலிலாளர் நக்கீரன் ஆகியோர் பேசினர்.

காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் புலத் தலைவர் பா. ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் சண்முகம் சரவணன், அ.கி. அரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக பெருமன்றத்தின் கொள்கை அறிக்கை முன்வைக்கப்பட்டு, அது தொடர்பான உரையாடல் நடைபெற்றது. பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் பெ. அன்பு தலைமை வகித்தார். எஸ்.கே. கங்கா அறிக்கையை முன்வைத்துப் பேசினார். எல்லை சிவகுமார், கோ. கலியமூர்த்தி, சு. பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் ச. தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் க. பாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top