Close
செப்டம்பர் 20, 2024 5:41 காலை

தருமசாலை தொடக்க நாள்:சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் கொடியேற்று விழா

புதுக்கோட்டை

சுத்தசன்மார்க்க சங்கத்தில் கொடியேற்றி வைத்த வள்ளலார் மாணவர் இல்லத்தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ்

புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் தருமசாலை தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஞான சபை வளாகத்தில் வடலூர் தருமச்சாலை தொடங்கிய தினமான வைகாசி 11-ஆம் நாளை முன்னிட்டு சன்மார்க்க கொடியேற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சன்மார்க்க சங்க பொருளாளர் முனியமுத்து தலைமையேற்றார் மாவட்ட சன்மார்க்க சங்க தணிக்கையாளர் ஆர். நமச்சிவாயம் அனைவரையும் வரவேற்றார். வள்ளலார் மாணவர் இல்ல தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் சன்மார்க்கக் கொடி ஏற்றி வைத்து  பேசுகையில், வள்ளல் பெருமான் மக்கள் பசி பட்டினி பிணி போன்றவற்றால் துன்புறுவதைக் கண்டு மனம் பதைத்தார் மக்களின் பசிப்பிணியைப் போக்க நினைத்தார்.
அந்த எண்ணத்தின் விளைவே வடலூரில் சத்திய தருமசாலை ஆக உருவானது. அவர் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணும் மனப்பக்குவம் வேண்டுமென நினைத்தார். அதே எண்ணம் நம் அனைவருக்கும் எப்போதும் வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை
மேலும் வள்ளல் பெருமான் வருவிக்க உற்ற 200 -ஆவது ஆண்டு விழா தர்மசாலை துவங்கிய 156  -ஆவது ஆண்டு விழா வடலூரில் ஜோதி தரிசனம் தொடங்கி 152 -ஆவது ஆண்டு விழா ஆகியவற்றை குறிக்கும் வகையில் முப்பெரும் விழாவாக 52 வாரங்கள் தமிழகம் முழுவதும் வள்ளலார் ஆண்டுவிழாவை அரசு விழாவாக கொண்டாட முன்வந்த தமிழக அரசுக்கு மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார் என்றார் மருத்துவர் ராமதாஸ்.
நிகழ்வில் தொடர்ந்து ஜோதி வழிபாடு சன்மார்க்க விண்ணப்பம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.  நிகழ்வில் சன்மார்க்க சங்க அன்பர்கள் குளத்தூர் பரமசிவம், திருக்கோகர்ணம் நாராயணன், மழையூர் சௌந்தர்ராஜன், கண்ணம்பட்டி கிருஷ்ணன், பட்டுக்கோட்டை நாகராஜ், நெய்வேலி ஐயப்பன் ஆகியோரும் பேசினர்.  பெரியநாயகி அனைவருக்கும் நன்றி கூறினார். நிறைவாக மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top