Close
நவம்பர் 22, 2024 4:56 காலை

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இடதுசாரிகளின் பிரசார இயக்கம் தொடக்கம்

தஞ்சாவூர்

மத்திய அரசைக்கண்டித்து தஞ்சையில் இடது சாரி கட்சிகள் நடத்திய பிரசார இயக்கம்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம் தஞ்சையில் புதன்கிழமை துவங்கியது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் வெறுப்பு அரசியல் செயல்பாடுகளை கண்டித்தும், பெட்ரோல், டீசல் வரியை குறைத்து, விலையை குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட நிதியை அதிகப்படுத்த வேண்டும்.

நகரம், மாநகரிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் நாடு தழுவிய பிரசார இயக்கத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்டு. எம் எல்(லிபரேஷன்), விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்து இன்று காலை 9 மணிக்கு தஞ்சை பள்ளிஅக்ரகாரத்தில் பிரசார இயக்கத்தை துவக்கி வீதிகள் தோறும் துண்டறிக்கைகள் வழங்கினர்.

பிரசார இயக்கம் கரந்தை, வடக்கு வாசல், கீழவவீதி, பூக்காரத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. சந்திரகுமார் .

மாவட்ட பொருளாளர் ந. பாலசுப்பிரமணியன்,  மாநகர செயலாளர் ஆர்.பிரபாகர், மாவட்டக் குழு உறுப்பினர் வெ.சேவையா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர செயலாளர் எம்வடிவேலன், நிர்வாகிகள் என். குருசாமி, முருகேசன்,  பி.செந்தில்குமார், வசந்தி, ராஜன், கே.அன்பு, கரிகாலன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சொக்கா ரவி,நிர்வாகிகள். வீரன் வெற்றி வேந்தன், தவ முதல்வன், போஜராஜன் ,சிபிஐ எம்.எல் (லிபரேஷன்) சார்பில் கே.ராஜன், ரமேஷ், எஸ்.எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top