புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் கறம்பக்குடி தாலுகா அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
குழந்தைகள் நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான செவிலியர் ரம்யா, மேற்பார்வையாளர் பெரியநாயகி, மருத்துவ பணியாளர்கள் சுகன்யா, தமிழ்செல்வி, நந்தினி, செந்தமிழ்செல்வி, சாமி யம்மாள் ஆகியோர் கொண்ட குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இதில், பிறந்தது முதல் ஆறு வயதுக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் எடை உயரம் கணக்கெடுக்கப்பட்டு குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைவு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டது.
இதில், கறம்பக்குடி தாலுகா கிளாங்காடு,பந்துவாக்கோட்டை புதுக்கோட்டைவிடுதி, பேயாரிப்பா ட்டி உள்ளிட்ட அங்கன்வாடி மையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மாவட்ட ஆரம்ப சிகிச்சை மையத்திற்கு உயர் சிகிச்சை மேற்கொள்ளப்பட பரிந் துரைக்கப்பட்டது.