Close
நவம்பர் 22, 2024 8:10 காலை

2-வது முறையாக மூன்று பிரபலங்கள் இல்லாத ஐபிஎல் இறுதிச்சுற்று

இந்தியா

ஐபிஎல் இறுதிப் போட்டி

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப் சுற்றில் ராஜஸ்தானும் ஆர்சிபி அணியும் நேற்று மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத் தில் வென்றது ராஜஸ்தான் அணி.

இதையடுத்து 2014-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று – தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூன்று பிரபலங்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போட்டியின் வரலாற்றில் மூவரும் விளையாடாத 2-வது இறுதிச்சுற்று இது. 15 ஐபிஎல் போட்டிகளின் இறுதிச்சுற்று களில் 13 முறை மூவரில் ஒருவராவது இடம்பெற்று வந்துள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் மூவர் (தோனி – கோலி – ரோஹித்)

2008 – தோனி

2009 – ரோஹித் சர்மா, கோலி

2010 – தோனி

2011 – தோனி, கோலி

2012 – தோனி

2013 – தோனி, ரோஹித் சர்மா

2014 – கொல்கத்தாவும் பஞ்சாபும் மோதியதால் மூவரும் பங்கேற்கவில்லை

2015 – தோனி, ரோஹித் சர்மா

2016 – கோலி

2017 – தோனி, ரோஹித் சர்மா

2018 – தோனி

2019 – தோனி, ரோஹித் சர்மா

2020 – ரோஹித் சர்மா

2021 – தோனி

2022 – குஜராத்தும் ராஜஸ்தானும் மோதுவதால் மூவரும் பங்கேற்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top