Close
நவம்பர் 25, 2024 5:07 மணி

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விஉரிமைச் சட்டம்-2009  படி தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில்உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்புமறுக்கப்பட்ட  (SC, ST, BC, MBC மற்றும் DNC பிரிவைச் சேர்ந்தவர்கள்) மற்றும் நலிவடைந்த பிரிவினரின் (பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டுஇலட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களின் குழந்தைகள்) குழந்தைகளுக்கு எல்.கே.ஜி-யில் 25 % இடஒதுக்கீடு மூலம்  சேர்க்கப் படுகின்றனர்.
இதனை நடைமுறைப் படுத்துவதற்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வழிகாட்டுதல் களை பின்பற்றி தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள 258 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 3790 இடங்கள் RTE 25%  இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இம்மாணவர் சேர்க்கைக்காக 20.04.2022 முதல் 18.05.2022 வரைஅறிவிக்கப்பட்டு  19.05.2022 வரை 25.05.2022 வரை பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும்  விண்ணப்பிக்கும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டு 5455 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில்உள்ள 258 சிறுபான்மை யற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 213 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால்  16.05.2022 தேதியிட்ட வழிகாட்டுதலின் படி 30.05.2022  திங்கட்கிழமை  25%  இட ஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக் கல்விஅலுவலரால் நியமிக்கப்படும் துறை பிரதிநிதி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் முன்னிலை யில் குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

1 சேர்க்கைக்கு இணையதள வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய காலம் 20.04.2022 முதல் 18.05.2022 வரை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டு பின்பு 19.05.2022 முதல் 25.05.2022 வரைகால நீட்டிப்பு செய்யப்பட்டது.
2 தகுதியானவிண்ணப்பதாரர் விவரம் / தகுதியில்லாத விண்ணப்பதாரர் விவரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் பள்ளித் தகவல் பலகை மற்றும் இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டிய நாள். 28.05.2022 பிற்பகல் 5. மணி
3 தகுதியானவிண்ணப்பங்கள் 25% ஒதுக்கீட்டில் நிர்ணயிக் கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில்தேர்வுசெய்யவேண்டிய நாள். 30.05.2022.
4. குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர் களின்  விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் தகுதியுள்ள, ஒருபிரிவுக்கு ஐந்து மாணாக்கர்கள் (5 seats per section) என்ற வீதத்தில் (வரிசை எண்ணிட்டு) காத்திருப்பு பட்டியலுக்கான மாணாக்கர்களின் விவரங்கள் ஆகியவற்றை பள்ளித் தகவல்பலகை மற்றும் இணைய தளத்தில் வெளியிடவேண்டிய நாள். 31.05.2022.
5. சேர்க்கை முடிவுற்றபின் அவ்விவரத்தினை நிர்ணயிக்கப் பட்ட படிவம் 4 இல் மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலருக்கு பள்ளிஅளிக்க வேண்டியநாள். 04.06.2022 அன்று அல்லது அதற்கு முன்னர்.

2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 25%  இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜியில் சேர்க்கை செய்வதற்கு இணைய தளம் வழியாகவிண்ணப்பித்த அனைத்து பெற்றோர் களும், 30.05.2022 அன்று சம்பந்தப்பட்ட பள்ளியில் காலை நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். பள்ளிப் பொதுத் தேர்வு மையமாக செயல்படுமாயின் 30.05.2022 பிற்பகல் குலுக்கல் நடைபெறும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top