புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை புத்தாஸ் வீரகலைகள் சிறுவர்கள், மாணவ மாணவிகள் கண்டுகளித் தனர் . புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம். இங்கு பல்வேறு விதமான , பறவைகள், விலங்கினங்கள், உள்ளிட்டவைகளும் பழங்கால முதுமக்கள் தாழிகள், மன்னர்கள் உபபோகித்த ஆயுதங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் பள்ளிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள தால் மாணவர்கள், பெரியவர்கள் குடும்பத்துடன் பார்வை யிட்டு கண்டுகளித்து வருகின்றனர் (28.05.2022) ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை புத்தாஸ் வீரகலைகள் சிறுவர்கள் மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். அருங்காட்சியகத் தில் வைக்கப்பட்டுள்ள அரிய வகை விலங்கினங்கள் பறவைகள் ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.
மேலும் அருங்காட்சியகத்தில் 20 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்ட டைனோசர் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மை சிறப்புமிக்க பல சேகரிப்புகள் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, திருமயம் கோட்டை, மற்றும் இலுப்பைக்குடி அய்யனார் கோவில் போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டவை ஆகும்.
கலைமற்றும் தொழில் துறைபிரிவு: உள்ளூர் கலை மற்றும் தொழில் துறை தொல்பொ ருட்கள், இசைக் கருவிகள், கூத்து கலைப்பொருட்கள் போன் றவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தொல்லியல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற பண்டைய நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், மிக அபூர்வமான கல் சிற்பங்கள். மற்றும் உலோகப் படிமங்கள், கலைப் பொருட்கள், எல்லாம் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இனப்பண்பாட்டியல் பிரிவு: தேர்ந்தெடுத்த போர்க்கருவிகள் கவசங்கள் மற்றும் தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் எல்லாம் இக்காட்சிக் கூடத்தில் இடம்பெற்றுள்ளதை பார்வையிட்டனர் .
கலைக் காட்சிக் கூடம் – ஓவியங்கள் பிரிவு: இங்குள்ள கலைக் காட்சிக் கூடத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களைக் புத்தாஸ் வீரகலைகள் சிறுவர்கள் மாணவ மாணவிகள் பார்வையிட்டு கண்டுகளித்தனர்