Close
செப்டம்பர் 19, 2024 7:12 மணி

புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சி: சாதனையாளர்களுக்கு விருதளிப்பு

விருது வழங்கல்

ஜோமன் ஃபவுண்டேஷன் நிறுவனர் திருமதி ஜோ. டெய்சிராணிக்கு விருது வழங்கிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய இரண்டு நாள் கல்வி கண்காட்சி 4 -ஆவது ஆண்டாக ஆசிரியர் சு. சக்திவேல் முயற்சியால் விஜய் பேலஸில் மே 28 மற்றும் 29 தேதிகளில் நடந்தேறியது.

விழாவின் நிறைவு நாளன்று புதுகை மண்ணில் தன்னலம் மறந்து சேவையும் சாதனையும் புரிந்தோருக்கான வரலாற்று நாயகர்கள் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, காரைக்குடி அழகப்பா மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையாள், தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி  மற்றும் டாக்டர் சலீம், கலைஞர் தமிழ்சங்க நிர்வாகி த. சந்திரசேகரன் , திமுக மாவட்ட பொருப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் , பேராசிரியர்  எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட சான்றோர்கள்  பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தன்னிடம் உதவிகேட்டு வரும் புற்றுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக மருத்துவம், கல்வி மற்றும் உணவிற்காக உதவி செய்துவரும் ஜோமன் பவுண்டேஷன் நிறுவனர் ஜோ.டெய்சிராணிக்கு  அவரது  சேவையைப் பாராட்டி அவருக்கு வரலாற்று நாயகி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top