Close
நவம்பர் 22, 2024 6:21 மணி

உங்கள் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி …

தமிழ்நாடு

ரேஷன் கார்டுடன் மொபைல் எண் இணைப்பது எப்படி

உங்கள் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணம் ஆகும். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் பல சலுகைகளை குடிமக்கள் பெற முடியும்.

பல இடங்களில் ரேஷன் கார்டு அடையாள சான்றிதழாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே இந்திய குடிமக்கள் தங்களது ரேஷன் கார்டை பொறுப்புடன் பாதுகாப்பாக வைத்திருப்பது அவர்களின் கடமை.

அதே போல் அந்த ரேஷன் கார்டில் சமீபத்திய தகவல்களை அனைத்தையும் கட்டாயம் அப்டேட் செய்து இருக்க வேண்டும். மொபைல் நம்பர் தொடங்கி, ஆதார் எண், புது உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், இறந்தவர்களின் பெயரை நீக்குதல் என சமீபத்திய விவரங்கள், மாற்றங்களை கட்டாயம் அப்டேட் செய்து இருக்க வேண்டும்.

அதிலும் முக்கியமாக நீங்கள் புதிய மொபைல் நம்பர் வாங்கினாலோ அல்லது உங்களுடைய மொபைல் எண் தவறாக இருந்தாலோ அதை ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும். முழு டிஜிட்டல் செயல்முறையாக மாறியுள்ள ரேஷன் கார்டில் சரியான மொபைல் எண் பதிவு செய்வது மிக மிக அவசியமான ஒன்று.

அதே போல், ரேஷன் கார்டில் மொபைல் நம்பரை பதிவு செய்தால் மட்டுமே மாதம் வாங்கும் ரேஷன் பொருட்கள் குறித்த மெசேஜை நீங்கள் பெற முடியும். அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கும் முழு விவரம், மெசேஜ் போல் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். எனவே மொபைல் எண்ணை ரெஷன் கார்டுடன் இணைத்திருப்பவது முக்கியமான ஒன்று.

இப்போது உங்கள் ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பரை எப்படி இணைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. 1967 என்கிற உதவி எண்ணுக்கு அழைத்து கேட்டால், செல்பேசி எண்ணை மாற்றுவது தொடர்பான விவரங்களை தெரிவிப்பார்கள்.

2. அதேபோல், ஒவ்வொரு தாலுக்கா அலுவலகத்திலும், தனியாக ரேஷன் கார்டு தொடர்பான உதவி மையம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்றும் செல்பேசி எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

அங்கு செல்வதற்கு முன், குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள குடுபத்தலைவர் தங்களது ஆதார் எண் மற்றும், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அங்குள்ள அதிகாரியிடம், மொபைல் எண் மாற்றுவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, புதிய எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

புதிய எண் மாற்றம் செய்த உடன், மாற்றப்பட்டதற்கான தகவல் உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரும்.

குறிப்பு: ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்பேசி எண்ணை ஆன்லைனிலோ, இ- சேவை மையத்திலோ மாற்ற இயலாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top