புதுக்கோட்டைபுத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்த வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. புதுக்கோட்டை புத்தாஸ் வீரக்கலைகள் பயிற்சி முகாம் நிறைவு வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கும்நிகழ்வு பிரகதாம்பாள் திருக்கோவிலில் நடைபெற்றது.
விழாவில், புதுக்கோட்டை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தலைமை வகித்தார். மாணவர்களை புத்தாஸ் கழகத்தின் நிறுவனர் சேது.கார்த்திகேயன் வரவேற்றார். டேக்வாண்டோ சங்கத்தலைவர் மருத்துவர் சலீம், புத்தாஸ் வீரக்கலைகள் கழக தலைவர் முனைவர் ரமேஷ் ஆகி்யோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம் , திலகவதியார் திருவருள் ஆதீனம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், வைத்தீஸ்வரா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ராமதாஸ்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி , பாரத் மெட்ரிக் மேனிலைப்பள்ளி தாளாளர் கலைச்செல்வி ,மாவட்ட வழக்கறிஞர் சங்க பொருளாளர் சுரேஷ், புத்தாஸ் வீரக்கலை கழகத்தின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஸ்வின் குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர், இந்த வீராங்கனைகளுக்கு கடந்த 12 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டு நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிறைவாக செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்,வீரர்-வீராங்கனைகள் பெற்றோர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழா வெகு சிறப்பாக நிறைவு பெற்றது.