Close
ஏப்ரல் 10, 2025 10:22 மணி

புதுக்கோட்டையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 279 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை

பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறுகிறார், ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள்  ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்  (30.05.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 279 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

பெற்றுக்கொண்ட  மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top