ஈரோடு மாவட்டத்தில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்பட்டு வரும் பத்திரிக்கையாளர்களுக்கு மற்ற மாவட்டங்களை போலவே அறை ஒதுக்கி தர வேண்டும் என ஈரோடு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் ஈரோடு மாவட்டச்செயலர் இரா. சிந்தனைச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:
பெரியார் மாவட்டத்தின் தலைநகரமான ஈரோடு மாநகரில் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பழைய கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தில் அறை ஒதுக்கப்பட்டு அங்கிருந்து தங்கள் பணியினை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஒரு வருட காலமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற் றப்பட்டதால் வெளியே சென்று செய்திகளை சேகரித்து மீண்டும் திரும்பி கோவில் வாசலில் வந்து அமர்ந்து தங்களு டைய பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாத காலமாக கடுமையான வெயிலிலும் தற்போது அடிக்கடி பெய்து வரும் கன மழையிலும் ஒதுங்க கூட இடமில்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தங்களுடைய உயிருக்கு வரும் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினர். இதில், பலரும் தொற்று ஏற்பட்டு தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
இதன்காரணமாக தமிழகஅரசால் முன் களப்பணியாளாராக அறிவிக்கப்பட்டு நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கி அனைவரது தியாகத்தையும் அங்கீகாரம் செய்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக அறை ஒதுக்க முன் வரவேண்டும். பத்திரிகையாளர்கள் அவர்களுடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவிட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.