Close
ஏப்ரல் 10, 2025 10:22 மணி

புதுக்கோட்டை துணை மின்நிலையப்பகுதியில் ஜூன் 4-ல் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மின் தடை அறிவிப்பு

புதுக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (Breaker Maintenance AB switches Maintenance, Jumper renovation, Tree clearance and pole replacement works) நடைபெற உள்ளதால்  4.6.2022  காலை 9  மணி முதல்  பிற்பகல்  3 மணி வரை  மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணைமின் நிலையத்திலி ருந்து மின் வினியோகம் செய்யப்படும்,  ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை.

நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் 4.6.2022  சனிக்கிழமை  காலை 9 மணி முதல் பிற்பகல்  3  மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவிசெயற் பொறியாளர் (இயக்கலும் & காத்தலும் / நகர் / ) அ. சையது அகமது இஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top