Close
நவம்பர் 22, 2024 1:42 மணி

புதுக்கோட்டையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம்: அமைச்சர்கள் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் பணிகள் தொடக்க நிகழ்வு

புதுக்கோட்டையில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தினை சென்னையில்  (03.06.2022) தொடங்கி வைத்தார். இதையடுத்து,  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில்,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மைப் பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து  தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  என்சிசி  மாணவர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி பணியாளர், தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் நோக்கத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி, பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து முறையான வகையில் மறுசுழற்சி செய்வதற்காக நகரப் பகுதிகளில் போதுமான அளவு பிளாஸ்டிக் சேகரிக்கும் பெட்டிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கும் வகையில் அரசாங்கத்தால் முன்னெடுக்கும் வகையில், பிளாஸ்டிக் குப்பைகளை பிளாஸ்டிக் சேகரிக்கும் வகையில் பெட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்றார்   அமைச்சர் எஸ்.ரகுபதி.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்   ஆகியோர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top