கோபி பகுதியில் 700 பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற 13ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி கோபிசெட்டி பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட கோபி பவானி சத்தியமங்கலம் பகுதியில் செயல்படும் 150 தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தும் 680 வாகனங்களின் ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் கோபி ஒத்தக்குதிரை யிலுள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு பணியில் கோபி ஆர்.டி.ஓ.திவ்யா பிரியதர்ஷினி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி ,கண்ணன், சுகந்தி கோபி கல்வி மாவட்ட அதிகாரி பழனி, கோபி போக்குவரத்து ஆய்வாளர் சஜினி ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
.இந்த ஆய்வின் போது வாகனங்கள் அரசின் விதிமுறைகள் படி உள்ளதா என்று ஆய்வு செய்து, பின்னர் அந்த வாகனத்தை சோதனை செய்ததற்கான ஸ்டிக்கரை வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டினர். குறைகள் இருந்த சில வாகனங்களை அவற்றை சரி செய்து மீண்டும் ஆய்வு பணிக்கு உட்படுத்தும் படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.