Close
நவம்பர் 10, 2024 4:11 காலை

தஞ்சையில் சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற காயிதேமில்லத் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் காயிதே மில்லத் பிறந்த நாள் விழா  தஞ்சையில் நடைபெற்றது.

நாட்டின் சுதந்திர போராட்ட வீரரும், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்  127 -ஆவது பிறந்த நாள் விழா  தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் ஜும்மா மசூதிபள்ளி வாசல் முன்பு  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காயிதேமில்லத் பிறந்தநாள் நினைவு கொடியேற்றப்பட்டது. காயிதே மில்லத்  நாடு விடுதலை பெற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர்.

முதன் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற போது இந்தியாவின் ஆட்சி மொழியாக உலகின் மூத்த மொழியான, முதல் மொழியான தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த பெருமைக்குரிய காயிதே மில்லத்.

இவரது பிறந்த நாளையொட்டி பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் நாட்டின் ஒற்றுமைக் கும், சகோதரத்துவத்திற்கும், மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கின்ற பாசிச சக்திகளை முறியடிப்போம் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என உறுதியேற் கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னூல் ஆப்தீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர செயலாளரும், 47 -ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜெ.ஷெரீப் முன்னிலை வகித்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக டவுன்காஜி டி.செய்யத் காதர் உசேன் புகாரி, சிறுபான்மை நலகுழு மாநகர. செயலாளர் நஸீர்.

சிபிஎம் முன்னாள் மாநகர செயலாளர். என். குருசாமி, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சையது முகைதீன், சேக் முஹமது, நாகூர்மீரான், அஜ்மல்கான், முகமது யூசுப், சாகுல்அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top