Close
செப்டம்பர் 20, 2024 7:24 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாகிறது முத்துக்குடா தீவு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முதல்வர் பங்கேற்கும் விழா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முத்துக்குடா தீவு சுற்றுலாத் தலமாகிறது. புதுக்கோட்டையில்  முதல்வர் பங்கேற்கும் விழாவில் இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  (ஜூன் 8) புதன்கிழமை  நடைபெற உள்ளது.

இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05  கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு  அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

முத்துக்குடா சுற்றுலா தலம்: ஆவுடையார்கோவில் அருகே. படகு சவாரி, தங்கும் விடுதியுடன் சுற்றுலாத் தலமாகிறது முத்துக்குடா தீவு.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு பொறுப்பேற்றவுடன்  சுற்றுலாத்தலம் உருவாக்குவதற்காக சென்ற ஆண்டில் மாவட்ட சுற்றுலா அலுவலருடன் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டார்.

அதில், கட்டுமாவடியில்  இருந்து அரசங்கரை வரை  40 கிலோ மீட்டர் தொலைவுக்கு  கடற்கரை பரப்பைக் கொண்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஆவுடை யார்கோவில் வட்டம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியிலுள்ள முத்துக்குடா தீவை சுற்றுலாத் தலமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தார். மேலும்  இத்திட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அலையாத்திக் காடுடன் தீவு போன்று உள்ள முத்துக்குடாவில் படகு சவாரியும், தங்கும் விடுதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. ரூ.3 கோடியிலான இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top