ஈரோட்டில் லஞ்சம் பெற்ற பொறியாளர் உள்பட இரண்டு பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மின் இணைப்பிற்கு தடையில்லா சான்று வழங்க, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது
கோபிசெட்டிபாளையத்தில் தந்தையின் பெயரில் உள்ள மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற விண்ணப்பித்த விவசாயியிடம் லஞ்சம் பெற்ற போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், மஸ்தூர் ரமேஷ்குமார் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியது.