75-வது ஆண்டு சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்பு
சென்னை சுங்கத்துறை சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை சென்னை யில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து சென்னை சுங்க இல்லம் சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு சார்பில் அனைத்து அலுவலகங்களிலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை மண்டல சுங்கத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான் ஓவியப் போட்டி மற்றும் மறைமுக வரி குறித்த முழக்கங்களை எழுதும் போட்டி உள்ளிட்டவை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அன்று பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் சென்னை சுங்க மண்டல அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான முழக்கம் எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது.
ஓவியப் போட்டி :
ஓவியப் போட்டியில் 5 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 52 மாணவர்கள் பங்கேற்று 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவினையொட்டி சுதந்திரப் போராட்டம், யோசனைகள், தீர்வுகள், செயல்பாடுகள், சாதனைகள் ஆகிய ஐந்து தலைப்புகளில் கீழ் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முழக்கம் எழுதும் போட்டி:
“மறைமுக வரிகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற வாசகங் கள் எழுதும் போட்டியில் சென்னை சுங்க மண்டலத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் வாசகங்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே.ஆர்.உதயபாஸ்கர் மாணவர்களுடன் கலந்துரையாடி, ஓவியப் போட்டி மற்றும் வாசகங்கள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.