Close
நவம்பர் 10, 2024 7:38 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைவழங்கும் சிறப்புமுகாம்: ஜூன் 14 ல் தொடக்கம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்புமுகாம்கள் குறு வட்டஅளவில் ஜூன் 14 முதல் ஜூலை 1 வரை  நடைபெற உள்ளது.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைபெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  மேலும் மத்தியஅரசினால் மாற்றுத் திறனாளி களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) வழங்கப்பட்டுவருகிறது.

மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெறவரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாளஅட்டைவழங்க 50 குறுவட்ட அளவில் சிறப்புமுகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக கீழ்கண்ட அட்டவணையில் உள்ளவாறு கும்பகோணம்,பூதலூர் மற்றும் சேதுபவசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் 9 இடங்களில் நடைறெவுள்ளது.கும்பகோணம் ஒன்றியம் மற்றும் நகரப்பகுதிகள் குறுவட்டம் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்:

சோழன் மளிகை 14.06.2022 செவ்வாய்கிழமை பெரியார் நினைவு சமத்துவபுரம் முழையூர், சோழன்மாளிகை
கும்பகோணம்  21.06.2022 செவ்வாய்க்கிழமை (K.M.S.S) கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவைமையம் கும்பகோணம்.
தேவனேஞ்சேரி  02.07.2022 சனிக்கிழமை உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தேவனேஞ்சேரி, பூதலுர் ஒன்றியம்.
திருகாட்டுப்பள்ளி (ம)அகரம்பேட்டை 16.06.2022 வியாழன் கிழமை சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளி, திருகாட்டுப்பள்ளி.
பூதலூர் 24.06.2022 வெள்ளிகிழமை ஊராட்சிஒன்றிய அலுவலகம் , பூதலூர் செங்கிப்பட்டி 30.06.2022 வியாழன் கிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, செங்கிப்பட்டி.
சேதுபவசத்திரம் ஒன்றியம் ஆண்டிகாடு 17.06.2022 வெள்ளிக்கிழமை அரசு ஆரம்ப சுகாதார மையம் அழகியநாயகிபுரம் பெருமகளுர் 25.06.2022 சனிகிழமை அரசுமேல்நிலைப்பள்ளி, பெருமகளுர்.
குருவிகரம்பை 01.07.2022 வெள்ளிகிழமை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, குருவிகரம்பை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு தொண்டைபிரிவு மருத்துவர், மனநலமருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பூதலூர் மற்றும் சேதுபவசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப்பகுதிகளைச் சேர்ந்த இதுநாள் வரைமாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Card) பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டைநகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமிற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் கட்டாயம் முககவசம் அணிந்துவரவேண்டும். சமூக இடைவேளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 இடங்களில்  நடைபெறும் முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை((UDID Card) பெறாதவர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top