Close
நவம்பர் 22, 2024 1:36 மணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்கிறார், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அனைத்து பள்ளி கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  தலைமையில்  (15.06.2022) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:தமிழக அரசு உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடவும், ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்திடவும், அனைத்து பள்ளி வாகனங்களையும் ஒரே நாளில், ஒரே இடத்தில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் புதன்கிழமை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அனைத்து பள்ளி கல்வி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் வாகனங்களின் பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், ஊர்தி இயக்கப் பதிவேடு, நடப்பில் உள்ள முதலுதவிப் பெட்டி, அவசரவழி, தீயணைப்புக் கருவி, ஓட்டுநர் பெயர் வில்லை பொருத்திய உரிய சீருடை, படிக்கட்டுகள், கதவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் புதுக்கோட்டை பகுதியில் 269 வாகனங்களும், அறந்தாங்கி பகுதியில் 120 வாகனங்களும், இலுப்பூர் பகுதியில் 82 வாகனங்களும், ஆலங்குடி பகுதியில் 36 வாகனங்களும் என மொத்தம் 507 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் குறைபாடு உள்ள வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பு இயக்க அனுமதிக்கப் படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கருணாகரன் (பொ) (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top