Close
நவம்பர் 22, 2024 5:32 மணி

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கான உள்கட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர் பாலக்காடு மோகன்பாபுவிடம் மனு தாக்கல் செய்த காங்கிரஸ் நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்துக்கான உள்கட்சி தேர்தலில் மாவட்டம், வட்டாரம், நகரம், பிரதேச (பிசிசி) காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், மாவட்ட(டிசிசி) காங்கிரஸ் உறுப்பினர் உள்பட மொத்தம் 90 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் பாலக்காடு மோகன்பாபு, வட்டார தேர்தல் அலுவலர் ஜான் கென்னடி ஆகியோர் பங்கேற்று வேட்பு மனுக்களை பெற்றனர்.

இதில், வடக்கு மாவட்டத்தலைவர் வி. முருகேசன், நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், ஜி.எஸ். தனபதி, ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு, ஆர். சிவகுமார், எம்.ஏ.எம். தீன், கே.கே, பாரூக், அப்துல்லா, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மனு தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை
தேர்தல் அலுலரிடம் மனு தாக்கல் செய்த புதுக்கோட்டை நிர்வாகிகள்

காங்கிரஸ் கட்சிக்கு  புதிய உறுப்பினர்களை சேர்க்க தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றினர்.

ஆனால், புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசில் இருக்கும் திறமையான இளைஞர்களை காங்கிரஸ் மேலிடம் தக்க வைக்கவில்லை. இரண்டாவது இளைஞர்களை அரவணைத்து தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் தலைவர்களும் இல்லை என்ற முணு முணுப்பு எழுந்தது .

2019-ம் ஆண்டு தலைவர் பதவிக்கு வந்த கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதில் வெற்றி கண்டார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் காங்கிரசை வளப்படுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் எதிர்பார்த்த மாற்றத்தையும் அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்பதே உண்மை .

இந்நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உள்கட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் ஜூன் 12 முதல் 15 வரை நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் மூலம் பதவிக்கு வரும் புதிய நிர்வாகிகளின் கையில்தான் அதன் எதிர்காலம் காத்திருக்கிறது என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top