Close
நவம்பர் 22, 2024 10:02 காலை

போக்குவரத்து தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தபேச்சு நடத்தக்கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை நடத்தி முடிக்கக்கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

தஞ்சாவூர். போக்குவரத்து தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்துபேச தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஏஐடியூசி தொழில்சங்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு  சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன், சங்கத்தின் கௌரவத் தலைவர் கே.சுந்தரபாண்டியன், தலைவர் டி.தங்கராசு துணைத் தலைவர்கள் எம்.மாணிக்கம் , ஜி.சண்முகம்,விளக்கிப் பேசினார்கள். சங்க நிர்வாகிகள் ஆர்.ரங்கதுரை, கேசுகுமார், அ.இருதயராஜ், ரெஜினால்டு ரவீந்திரன், எம்.பி.இளங்கோவன், சி.ராஜமன்னன், என்.ஆர். செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா நிறைவுசெய்து பேசினார். முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

கோரிக்கைகள்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் தொழிலாளர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . கடந்த 1977ஆம் ஆண்டு முதல் மூன்று வருடத்திற்கு ஒரு முறை ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் பேசப்பட்டு சம்பள உயர்வு ஏற்படுத்துவது நடைமுறையில் உள்ளது. போக்குவரத்து கழகம் உருவாக்கப்பட்டு தன்னலமற்ற, அர்ப்பணிப்பான சேவை மூலம் 50 ஆண்டு பொன் விழா கடந்துள்ளது. போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது .ஒன்பதாவது ஒப்பந்தத்திற்குப் பிறகு நடந்து முடிந்துள்ள 13 வது ஊதிய ஒப்பந்தம் வரை உரிய நேரத்தில் பேசப்படாமல் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தான் நடந்து முடிந்துள்ளது.தற்போது 14 வது ஊதிய ஒப்பந்தம் 1 .9 .2019 அன்று பேசி முடித்திருக்க வேண்டும், ஆனால் ஒப்பந்தம் முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் செப்டம்பரில் வரவுள்ள நிலையில் இன்னும் பேசப்படாமல் உள்ளது கண்டனத்திற் குரியதாகும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது மிகவும் வேதனைக்குரியதாகும். தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வு, பொருளாதார தேவைகள், குடும்பத் தேவைகளை கருத்தில் கொண்டு உடனடியாக 14 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியர்களின் உயர்ந்துவிட்ட பழைய- புதிய அகவிலைப்படி உயர்வு ஆறு ஆண்டுகளாக என்பது மாத கால உயர்வு என்பது நிலுவையில் உள்ளது. உடனடியாக என்பது மாத கால அகவிலைப்படி உயர்வை அறிவித்து நிலுவைத் தொகை வழங்குவதுடன், ஓய்வூதியத்துடன் இணைத்து உயர்த்தி வழங்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களுக்கு நாளுக்கு நாள் ஏற்படுகின்ற கூடுதல் செலவினங்களை அவ்வப்போது நிர்வாகத்திற்கு வழங்கி சீரான செயல்பாட்டுக்கு உதவிட வேண்டும், பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான தினசரி பயணப்படி பேட்டாவை அவ்வப்போதே வழங்கிட வேண்டும், கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஆறு வருடங்களாக காத்திருக்கின்ற வர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்ததை 60-ஆக உயர்த்திய பின் தற்போது பெரும்பாலானோர் ஓய்வு பெற்று சென்றுள்ள நிலையில் ,அவர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

வேலைப்பளுவை குறைக்க வேண்டும், தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும், தரமான தேவையான உதிரிபாகங்கள் உடனுக்குடன் வழங்கிட வேண்டும் ,கடந்த ஆட்சிக்காலத்தில் தனியாருக்கு சாதகமாக வழங்கப்பட்ட வழித்தடங்களை திரும்பப் பெற்று ,கழக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் ,கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை 100 சதவீதம் முழுமையாக இயக்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிவித்த நடைமுறைப்படுத்த வேண்டும்.

கடந்த 2020 மே மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின்போது இறந்தவர்களுடைய ஓய்வு கால பணப்பலன்கள் இருபத்தி நான்கு மாதங்களாக வழங்கப்படாமல் மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் உள்ளதை உணர்ந்து உடனடியாக வழங்கிட வேண்டும் ,கடந்த ஆட்சி காலத்தில் போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை எல்ஐசி, கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு உடனுக்குடன் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் தமிழக அரசு இனியும் காலம் கடத்தாதே அலட்சியப்படுத்தாது உடனடியாக தீர்வு காண ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top