Close
நவம்பர் 22, 2024 4:47 காலை

பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகன வசதி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஆணைமலை பகுதி மாணவர்களுக்கு வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டரி வாகனம்

பொள்ளாச்சி அருகே பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகனம் வனத்துறை மூலம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ளது. பழைய சர்கார்பதி மலை கிராமம். தொடக்கப்பள்ளி மட்டுமே இங்கு உள்ள நிலையில் உயர்கல்வி பயில மாணவர்கள் 6 கிலோ மீட்டர்கள் நடந்து பயணிக்கும் நிலை இருந்தது.

இதனால், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகிய வனத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் 14-பேர் செல்லும் அளவிற்கு 2.80-லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி வாகனத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக பழைய சர்கார்பதி மலைக்கிராமத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளதாகவும்.

மேலும், பல தன்னார்வ அமைப்புகளை அணுகி அடுத்த கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூமாட்டி, சின்னார்பதி, கோழிகமுத்தி, எருமை பாறை, ஆகிய மலைகிராம மாணவர்கள் பள்ளி செல்ல இது போன்ற பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தர உள்ளதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top