புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வில் 91.58 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8,606 மாணவர்கள், 9,969 மாணவியர்கள் என மொத்தம் 18,575 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவர்கள் 7,519 , மாணவிகள் 9,492 பேர் என மொத்தம் 17,011 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 87.37 %, மாணவிகள் தேர்ச்சி 95.22 % ஆகும். மொத்த மாணவர்களின் தேர்ச்சி 91.58 % ஆகும்.
கல்வி மாவட்டம் வாரியாக அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6196 மாணவ,மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 5770 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி 93.12 %ஆகும்.
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7200 மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.இதில் 6604 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி 91.72 %ஆகும்.
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5179 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 4637 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .தேர்ச்சி 89.53% ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 50 ஆகும். 107 அரசுப்பள்ளிகளில் 8 அரசுப்பள்ளிகளும், 18 உதவி பெறும் பள்ளி,பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 3 பள்ளிகளும்,3 சுயநிதிப் பள்ளிகளில் 2 பள்ளிகளும்,47 மெட்ரிக் பள்ளிகளில் 37 மெட்ரிக் பள்ளிகளும் 100% சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்:அரசினர் மேல்நிலைப்பள்ளி மாங்காடு,அரசினர் மேல்நிலைப்பள்ளி சிலட்டூர்,அரசினர் மேல்நிலைப்பள்ளி தாந்தாணி, அறந்தாங்கி ஏ.ஜெ.ஜெ .ஓரி அரபிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை ஏ.டி.ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
மீமிசல் நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கருவிடைச் சேரி எஸ்.உமையாள் ஆச்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மணல்மேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ரெத்தினக்கோட் டை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி வெஸ்ட்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோட்டைப்பட்டி ணம் எம்.ஹெச்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளாகுளம் செயின்ட் இக்னேஷியஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஆவுடையார்கோவி ல் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அறந்தாங்கி அம்ரிதா வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,அறந்தாங்கி ஷேக் பாத்திமா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்டையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி.
மண்ணவேலம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி, கீழக்குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வலையப்பட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
அன்னவாசல் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
மேட்டுச்சாலை மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொன்னமராவதி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
இலுப்பூர் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி, காரையூ ர் இதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முக்காணமலைப் பட்டி மெஜஸ்டிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளத்தூர் முத்தூச்சாமி வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.கே.பட்டி ஜீவன் ஜோதி மேல்நிலைப்பள்ளி.
அரிமளம் சிவகமலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, லெம்பலக்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை எஸ்.கே.பாலையா மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ் .மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை சுதர்சன் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவபுரம் மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருமயம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை தி லிட்டில் ஏஞ்சல் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
கந்தர்வக்கோட் டை வித்யா விகாஷ் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நச்சாந்துபட்டி புதூர் அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , திருமயம் மூங்கிதாபட்டி மௌண்ட் ஆலிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 50 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.