Close
செப்டம்பர் 20, 2024 10:00 காலை

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற  மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் சுழல் கோப்பை வென்ற ஐ.சி.எப் அணி

சென்னை

திருவொற்றியூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கிய திருவொற்றியூர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர். உடன் பூப்பந்தாட்டக் கழக மாநில செயலாளர் வி.எழிலரசன்.

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற  மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் சுழல் கோப்பையை வென்ற ஐ.சி.எப் அணி.

சென்னை திருவொற்றியூரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.

திருவள்ளூர் கடந்த இரண்டு நாட்களாக மாநில அளவில் பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் நடைபெற்றது. போட்டியினை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு முன்னிலையில்  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதில் பல்வேறு முன்னணி விளையாட்டு அமைப்புகளைச் சேர்ந்த 17 அணிகளைச் சேர்ந்த 34 வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்றனர். மொத்தம் 26 போட்டிகளை நடைபெற்றன.  ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் ஐ.சி.எப் மற்றும் தென்னக ரயில்வேயைச் சேர்ந்த இரண்டு அணிகள் பங்கேற்றன.

இதில் ஐ.சி.எப் அணியைச் சேர்ந்த அரவிந்தன், விக்னேஷ் ஆகியோர் வெற்றிபெற்று சுழல்கோப்பையை வென்றனர். தென்னக ரயில்வே சார்பில் பங்கேற்ற ராஜேஷ், சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பெற்றனர்.  ஒட்டு மொத்தமாக சிறந்த வீரர்களாக திருவொற்றியூர் பூப்பந்தாட் டக் கழகத்தைச் சேர்ந்த ராகுல், கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருவொற்றியூர் சட்டப் பேரவை உ஫றுப்பினர் கே.பி.சங்கர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.  அப்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பூப்பந்தாட்ட போட்டி சேர்க்கப்படவில்லை.

எனவே அனைத்து துறைகளிலும் பூப்பந்தாட்டம் சேர்க்கப்பட வேண்டும்.  திறமையான விளையாட்டு வீரர்கள் நேரடியாக விளையாட்டு ஒதுக்கீட்டில் பணியில் சேர்வது போல் மத்திய மாநில அரசுகள் விதிகளை திருத்த வேண்டும் என பூப்பந்தாட்டக் கழக நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதாக கே.பி.சங்கர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் பூப்பந்தாட்டக் கழக மாநிலச் செயலாளர் வி.எழிலரசன், நிர்வாகிகள் இ.பார்த்திபன், டாக்டர் ஏ.சீனிவாசன், திருவொற்றியூர் சமூக சேவை சங்க நிறுவனர் கோட்டீஸ்வரன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் கே.சுப்பிரமணி, திருவொற்றியூர் நல சங்க நிர்வாகி மதியழகன், திமுக நிர்வாகிகள் எஸ்.முத்தையா, பி. சைலஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top