Close
நவம்பர் 22, 2024 12:38 காலை

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா அரங்கம் அமைக்க கால்கோள் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை டவுன் ஹாலில் தொண்டைமான்மன்னர் நூற்றாண்டு விழா அரங்கம் அமைக்க நடைபெற்ற கால்கோள் விழாவில் பங்கேற்ற விழாக்குழுவினர்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழாவை ஜூன் 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் நடைபெறுகிறது.

  புதுக்கோட்டை டவுன் ஹாலில்  மன்னர் நூற்றாண்டு விழா விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

விழா நடைபெறும் அரங்கம் அமைப்பதற்கான  கால் கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது. நூற்றாண்டு விழாக்குழு செயலர் ரா. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழச்சியில், விழாக்குழு நிர்வாகிகள் மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன்,  ஆர். ரவிச்சந்திரன், கவிஞர் ச. பாரதி, அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் ராம. வயிரவன், ஏ. வீரமணி,  ஏ. இப்ராஹிம்பாபு, ஆர். சிவகுமார், பி.எஸ். கருப்பையா, எம். மத்தியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை

பின்னர், நூற்றாண்டு விழாக்குழுச் செயலர் ரா. சம்பத்குமார் கூறியதாவது:
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சுமார் 308  ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரும், இந்திய குடியரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இணைத்தவருமான ராஜா ராஜகோபால தொண்டைமான், 1922 -ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி பிறந்தார். 1928- இல் தனது 6 -ஆவது வயதில் சமஸ்தானத்தின்  இளவரசரானார். 1948-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் மன்னர் பொறுப்பை வகித்தவர்.

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 -ஆம் தேதி ஆங்கிலேயரிடமி ருந்து  நாட்டுக்கு விடுதலை கிடைத்தது. அப்போது சுதேசி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை 1948 -இல் பொறுப்பில் இருந்த ராஜா ராஜகோபால தொண்டைமான், தில்லி சென்று நாட்டின் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் முன்னிலையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க கையெழுத்திட்டார்.

அப்போது சமஸ்தானத்தின் கஜானாவில் இருந்த ரூ. 48 லட்சம் நிதியுடன் மொத்த சொத்துகளையும் இந்திய அரசிடமே கொடுத்துவிட்டு வந்தவர் ராஜா ராஜகோபால தொண்டை மான்.
அதன்பிறகு புதுக்கோட்டை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவதற்காக, ராஜகோபால தொண்டைமானின் அரண்மனையை (சுமார் 100 ஏக்கர் வளாகம்) அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக குறைந்தளவு அரசு நிதியைப் பெற்றுக் கொண்டு வழங்கினார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்த இவரது நூற்றாண்டு விழாவை புதுக்கோட்டையில் 4 நாள்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்றார் ரா. சம்பத்குமார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top