Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சாவூர்

தஞ்சை புத்தகத்திருவிழா பணிகள் தீவிரம்

தஞ்சாவூர்  அரண்மனை வளாகத்தில் ஐந்தாவது புத்தகத் திருவிழா கண்காட்சி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற (15-7-2022) முதல் (25-7-2022) வரை 11 நாட்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் ஐந்தாவது புத்தகத்திருவிழா தஞ்சாவூர் அரண்மனைவளாகத்தில் நடைபெறஉள்ளது.

இந்தபுத்தகதிருவிழா சிறப்பாகஅமைவதற்காக அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று ஒவ்வொரு துறைகளும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாநடைபெறும் வளாகத்தில் புத்தக திருவிழா வின் அரங்குகள் அமைப்பது குறித்தும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்தும் உணவு திருவிழா நடைபெறும் இடம் குறித்தும் களஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைவாக வும் சிறப்பாகவும் முடித்திட அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் இப்புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறன் மேம்படுத்திட முடியும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன் இக்கண்காட்சி நடைபெறஉள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மாநகராட்சிஆணையர் சரவணகுமார் மற்றும் பல்துறை அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top