Close
செப்டம்பர் 20, 2024 6:30 காலை

செல்போனை  திரும்ப ஒப்படைத்தால் சம்பளம் கிடையாது: அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

ஈரோடு

கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்

செல்போனை  திரும்ப ஒப்படைத்தால் சம்பளம் கிடையாது என அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளதால்  பரபரப்பு  ஏற்பட்டது.

தமிழ் நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்செயற்குழுகூட் டம் பெருந்துறையில் நடைபெற்றது இக் கூட்டத்தில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 3 வருட பணி முடித்தபின் குறு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு அனுபவ மிக்க அங்கன்வாடி ஊழி வர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 29, 30 -ஆம் தேதி அன்று சென்னை இயக்குனர் அலுவலகம் முன்பு செல்போனை திரும்ப ஒப்படைப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத் தப்போவதாகவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் இயக்குனர் அமுதவல்லி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக 29.06.2022 அன்று மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டார அலுவலரிடம் அனைத்து செல்போன்களை யும்  ஒப்படைப்பது என்றும், 30.06.2022 அன்று இயக்குநர் (ம) குழும இயக்குநர் அலுவலகத்திற்கு உள்ளே பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தபோவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு தொடர்பான மிக முக்கியமான பணிகள் மற்றும் பணியாளர்களது பணி விவரங்கள் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் 29.06.2022 அன்று மாநிலம் முழுவதும் அந்தந்த வட்டார அலுவலரிடம் அனைத்து செல்போன்களைளையும் ஒப்படைப்பு செய்வது முறையற்ற செயலாகும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மையம் திறப்பது முதல் அன்றன்று செய்யும் அனைத்து பணிகளையும் போஷான் டிராக்கர் மற்றும் ICDS TN செயலி மூலம் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அன்றைய தினம் செய்த பணிகளின் விவரமும், பணியில் இருந்ததாகவும் அறிய இயலும்.

மேலும், போஷான் டிராக்கர் மற்றும் ICDS TN செயலி மூலம் தங்களது பணியினை செய்யாமல் கைப்பேசி ஒப்படைக்கும் பணியாளர்களுக்கு “No Work No pay“என்பதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், 30.06.2022 அன்று தொடர் காத்திருப்புபோராட்டத்தில் கலந்து கொள்ளும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு “No Work No pay” அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top