Close
நவம்பர் 23, 2024 1:28 மணி

தலைமுடி மூலம் வேனை இழுத்துச்சென்று சாதனை செய்த பள்ளி மாணவிக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

புதுக்கோட்டை

உலக சாதனை படைத்த பள்ளி மாணவியை வாழ்த்திய அமைச்சர் மெய்யநாதன்

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவி வெ.சம்யுத்தா,  தான் வென்ற  World Records Union சான்றிதழினை  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவி (கே.வெங்கடேஷ்-வி.ஆஷா தம்பதியர் மகள்)  வெ.சம்யுத்தா தனது தலை முடியால் வேனை இழுத்து உலக சாதனை படைத்துள்ளதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம்   World Records Union சான்றிதழினை  (02.07.2022) காண்பித்து வாழ்த்து பெற்றார்.

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7ஆம் வகுப்பு மாணவி வெ.சம்யுத்தா 01.07.2022 அன்று World Records Union சாதனைக்காக 1,410 கிலோ எடையுள்ள வேனை,  சரிஃபா  முன்னிலையில் 110 மீட்டர் இடைவெளியில் 1 நிமிடம் 10 நொடிகள் தனது தலை முடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

மாணவி வெ.சம்யுத்தா தனது 8வது வயதில் ஏற்கனவே 990 கிலோ எடையுள்ள காரை  112.2 மீட்டர் இடைவெளியில் 1 நிமிடம் 46 நொடிகள் தனது தலை முடியால் இழுத்து இந்தியன் ரெக்கார்டு மற்றும் ஆசியா ரெக்கார்டு என்ற 2 ரெக்கார்டுகளை செய்துள்ளார்.

இதன்மூலம் மாணவி வெ.சம்யுத்தா World Records Union புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார். மாணவியின் பயிற்சியாளர் (கராத்தே மாஸ்டர்) இளையராஜா ஆவார்.எனவே மாணவி வெ.சம்யுத்தா இன்னும் பல வெற்றிகளை பெற்று வாழ்வில் மென்மேலும் முன்னேற வேண்டும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top