Close
செப்டம்பர் 20, 2024 5:54 காலை

ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு

ஈரோட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயான் உற்பத்தி விசைத்தறிக்கூடங்கள்

ரயான் (RAYON) துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒரு வார கால உற்பத்தி நிறுத்த போராட்டத்தைத்  ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு , லக்காபுரம் , சித்தோடு போன்ற பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற  30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் ரயான் நூல் மூலம் ரயான் துணி வகை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விசைத்தறிக்கூடங்கள் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு பெற்ற வருகின்றனர். இந்நிலையில் , கடந்த சில மாதங்களாக ரயான் நூல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாததால், உற்பத்தி செய்யப்படும் ரயான் துணிக்கு 120 கிராமுக்கு இரண்டு ரூபாய் நஷ்டம் அடையும் நிலை நீடிப்பதால் ரயான் உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

எனவே  (3.7.2022) முதல் ஒரு வார காலத்திற்கு உற்பத்தியை நிறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top