Close
செப்டம்பர் 20, 2024 8:36 காலை

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயிலில்   ஆனி திருமஞ்சனத்தையொட்டி  நடராஜருக்கு சிறப்பு பூஜை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்தில் உள்ள நடராஜருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை அருள்மிகு சாந்தநாதசுவாமி திருக்கோயிலில்   ஆனி திருமஞ்சனத்தையொட்டி  நடராஜருக்கும்- சிவகாமி அம்பாளுக்கும் பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரமும் தீபாராதனை  நடந்தது.

ஆனி திருமஞ்சனத்தையொட்டி  நடராஜருக்கு உரிய அற்புதமான நாள். திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்நானம். அதாவது மங்கள நீராட்டு. சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருமஞ்சனம் என்றே அழைக்கப்படுகிறது.

சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நடராஜர் ஆலயத்தில் நிகழும் ஆனி திருமஞ்சனம் நிகழ்வையும் தேரோட்டத்தையும் காண பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.

புதுக்கோட்டை
விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

ஆனித் திருமஞ்சனம், ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதி களுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்என்பது  ஐதீகமாகும் .

ஆனி மஞ்சன வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top