Close
மே 22, 2025 11:50 மணி

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பொன்னமராவதி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

கே.நெடுவயல் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர் வு  ஊர்வலம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சள்பை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பை பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கே.நெடுவயல் ஊராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் சரவணன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் பள்ளிக் குழந்தைகள் பிளாஸ்டிக் பயன் பாட்டினை முற்றிலும் ஒழித்து துணிப்பையை கையிலேடுப் போம் என்ற விழிப்புணர்வு பாதாகை ஏந்தி பேரணியாக சென்றனர்.இதில் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் கரும்பாயிரம், ஊராட்சி செயலர் பொன்னுச்சாமி, பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top