Close
நவம்பர் 22, 2024 12:40 மணி

இலட்சம் பேர் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது” வியாழக்கிழமை நடைபெறுகிறது

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு

ஐந்தாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாப் பணிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான மாவட்ட நிர்வாகம்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புதுக்கோட்டை புத்தக விழா ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள்  இணைந்து  ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

அதன் முக்கிய நிகழ்வாக “புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி நாளை 07-07-2022 வியாழக்கிழமை முற்பகலில்   நடைபெறுகிறது.

இதில், மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, நூலகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வித்திட்ட இடங்களிலும்  காலை 11.30 முதல் 12.30 வரை புத்தகம் வாசிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின்  உத்தரவின்படி அனைத்து   வட்டார வளர்ச்சி அலுவலர்களும் ஒத்துழைப்பை வழங்கவுள்ளனர்.  முதன்மைக் கல்வி அலுவலரும்  மாவட்டம் முழுவதும் இருந்து வந்த மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் புதுக்கோட்டை  வாசிக்கிறது நிகழ்வின்  பதாகைகளை வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தியிருக்கிறார்.

அத்துடன், 07-07-2022 வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மாவட்டம் முழுவதும் நடக்கும் புதுக்கோட்டை  வாசிக்கிறது  நிகழ்வுகளை, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தொடங்கி வைத்து மாணவியரிடம் புத்தகவிழாப் பற்றிக் கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர்  மணிவண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர் என புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் நா.முத்துநிலவன்  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top