Close
நவம்பர் 22, 2024 10:16 மணி

கோபி அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு

கோபி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது.இந்த மருத்துவமனைக்கு கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான வெளிநோயாளிகள்,மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் நோயாளிகள் வரவு அதிகரித்த நிலையில் சாம்சங் நிறுவனம் சார்பில் டயாலசிஸ் இயந்திரங்கள் வழங்கபட்டுள்ளது.இந்த இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றிற்க்கு 9 பேருக்கு டயாலசிஸ் செய்ய முடியும், ஆனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையினால் நாள் ஒன்றிற்க்கு 6 நபர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

அதே போல சி.டி.ஸ்கேன் மற்றும் அல்ட்ரா ஸ்கேன் பிரிவுகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருதால் குறைந்தளவு நோயளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இது குறித்து கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று மருத்துவ அலுவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர் ஆட்கள் பற்றாக்குறை குறித்து சம்பபந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி ஆட்கள் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்,.

மேலும் அவசர சிகிச்சை பிரிவிறக்கு வரும் நோயாளிகளுக்கு ஏதுவாக படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்பட்டும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதில் தலைமை மருத்துவர் கலாபிரியா, முன்னாள் எம்.பி.சத்தியபாமா, ஒன்றிய குழுத் தலைவர் வழக்கறிஞர்  மவுதிஸ்வரன், தகவல்நுட்ப பிரிவு செயலாளர் ஏ.என் முத்துரமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top