ஈரோட்டில் 9 மாவட்ட தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி தொடங்கியது.
ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நேற்று துவங்கியது. போட்டிக்கு மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சத்தியநாராயணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி முன்னிலை வகித்தார். இந்த போட்டிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகளும், தொடர்ந்து கூடைபந்து, இறகுபந்து, வாலிபால், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீ, 400 மீ, 1500 மீட்டம் ஓட்டம் நடந்து வருகிறது. மாலையில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிப்பவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பதக்கம்,பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும். போட்டிகள் இன்று (ஜூலை8) தொடர்ந்து நடக்கிறது.