ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று மாலை 4 மணி முதல் வருமான வரி சோதனை நடத்தினர் டிரினிவாஇன்ஃப்ரா ப்ராஜெக்ட் எனும் நிறுவனம் பெரியார் நகரில் ரியல் எஸ்டேட் ஓனர் அசோசியேசன் ஆப் இந்தியா நிறுவன வளாகத்தில் முதல் மாடியில் செயல்படுகிறது.
பெங்களூரை தலைமைஇடமாக கொண்ட இந்நிறுவனத்தின் கிளைகள் பல்வேறு இடங்களில் உள்ளது இந்நிறுவனத்திற்கு சொந்தமான கோவை அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நேற்று முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சோதனையில் ஏழு வருமானவரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் இந்த அலுவலகம் அலுவலகம் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு செயல்படாமல் இருந்தபோதிலும் அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் ஆய்வு நடத்தினர் ஆனால் இது குறித்து விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.