Close
செப்டம்பர் 20, 2024 6:58 காலை

மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் உதவி வழங்குகிறார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்குத்தேவையான சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும்: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சார்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  தலைமையில் (08.07.2022) நடைபெற்றது.

அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், தஞ்சாவூர் எம்பி  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ,மாநிலங்களவை உறுப்பினர்.எஸ்.கல்யாணசுந்தரம் .

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசுமுதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கே.பிரபாகர் ,நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர்  டி.ஜி.வினய்,நிலநிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.ஜெயந்தி ,வருவாய் நிர்வாக இணைஆணையர்  ஏ.ஜான் லூயிஸ் ,மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில்  வருவாய்த்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :

வருவாய்த்துறை பணி என்பது நீண்ட நெடிய பாரம்பரியமிக்க துறையாகவும்,மக்களுக்கு சேவை செய்கின்ற முக்கியத் துறையாகவும் உள்ளது. இத்துறையின் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் பயன்பெறும் வகையில் பணியாற்றிட வேண்டுமென்றும், மாணவர்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி சான்றிழ்களை வழங்கிட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறந்து நடைபெறுகின்ற நிலையில் மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிடவேண்டும்.

இதைப்போல, மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் பல்வகை திட்டங்களின் கீழ் நலத்திட்டஉதவிகள் வழங்குதல் மற்றும் வருவாய்த்துறையின் அனைத்து சேவைகளையும் அரசுவழிகாட்டுதலின்படி, மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்.

மேலும் இந்தஆய்வு கூட்டத்தில் முதல்வரின் முகவரி, சமூகபாதுகாப்பு திட்டம்  மற்றும் இதர சான்றுகள், பழங்குடியினர் இனச் சான்று, பட்டாமாறுதல் (உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அற்றது),பட்டா பிழை திருத்தம் சிறப்புமுகாம், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இணைய வழிபட்டா, பட்டா-மேல்முறையீட்டு மனுக்கள், ஆக்ரமணங்கள் அகற்றுதல், நிலமாற்றம், நிலஉரிமை மாற்றம், நிலகுத்தகை, நிலஎடுப்பு, ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீடு மற்றும் நீண்டகால நிலுவை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்)  என்.ஓ. சுகபுத்ரா, சட்டமன்றஉறுப்பினர்கள்  துரை.சந்திரசேகரன்  (திருவையாறு),டி.கே.ஜி நீலமேகம்  (தஞ்சாவூர்), க.அன்பழகன் (கும்பகோணம்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), முனைவர் எம்.எச்.ஜவாஹறிருல்லா (பாபநாசம்), பூண்டிகே.கலைவாணன்  (திருவாரூர்),எஸ்.ராஜ்குமார் (மயிலாடுதுறை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் , கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் , மாவட்ட ஊராட்சித்தலைவர் ஆர்.உஷாபுண்ணிய மூர்த்தி, மாவட்ட ஊராட்சித்துணை தலைவர் .எஸ் கே.முத்து, துணைமேயர் .அஞ்சுகம் பூபதி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top