ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 15 -ஆம் ஆண்டு பணி ஏற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா வழக்கறிஞர் எஸ்.மரிய சூசை தலைமையில் அரசடிப்பட்டி அம்சம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
2022-23 ஆம் ஆண்டின் தலைவராக ஏ.அய்யப்பன், செயலாளராக கே.முருகராஜ், பொருளாளராக அற்புத அலெக்சாண்டர் ஆகியோரை 2024- 25 ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் இரா.ராஜா கோவிந்தசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய உறுப்பினர்களை மண்டல செயலாளர் ஏ.பாண்டியன் துணை ஆளுநர் ஆர்.சேவியர் ஆகியோர் ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினர். மண்டல செயலாளர் திட்டம் ஆர்.ஆரோக்கியசாமி, சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் வழக்கறிஞர் எஸ்பி.ராஜா, மேனாள் துணை ஆளுநர் கேஎன்.மோகன் ராஜா ஆகியேர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்வி உதவி த் தொகை யாக ஒரு பெண் குழந் தைக்கு ரூபா ய் ஆயிரம் முதல் தவணையாக வழங்கப்பட்டது. ஏழை தாய்மார்களுக்கு அன்னதான திட்டத்தின் ஒரு பகுதியாக நான்கு பேருக்கு தலா ஒரு சிப்பம் அரிசி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஐந்து மாணவர்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இவர்கள் நன்றாக படிக்க உதவிய ஆசிரியர்கள் செல்வகுமார் ராமகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நீர்நிலைகளை மேம்படுத்தி ஏரி குளங்களை தூர்வாரி விவசாயத்தை பாதுகாத்து வந்த புதுக்கோட்டை விடுதி பஞ்சாயத்து தலைவர் அகஸ்டினுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு ஆலங்குடி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்ட 500 மரக்கன்றுகளை நீர் ஊற்றி பராமரித்து நல்ல முறையில் வளர்த்து வரும் இயற்கையை நேசிக்கும் களபம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி பாலசுப்பிரமணியனை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
கே. வி. கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மங்கள மெய்யர் தனது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை தரம் உயர்த்தி அனைவரும் கல்வி கற்க ஏற்பாடு செய்து வருகிறார். இவரை பாராட்டி விருது வழங்கப்பட்டது. ஆலங்குடி அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது.
சமூக சேவகர் விருதுகளை செந்தில்ராஜா என்பவருக்கும் ஆர் .குமார் என்பவருக்கும் வழங்கப்பட்டது.முன்னதாக வருகை தந்த அனைவரையும் மேனாள் தலைவர் கே.சுப்பிரமணியன் வரவேற்றார். நிறைவாக கே.முருகதாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துணை ஆளுநர்கள் முருகராஜ், லூர்து நாதன், கான் அப்துல் கபால்கான், வில்சன், ஆனந்த், லியோ பெலிக்ஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.