புதுக்கோட்டையில் முதன் முறையாக ஜெகந்நாத ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சாந்தநாத சுவாமி ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரை தொடங்கியது. நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தொடங்கி வைத்தார். இதில் ஹரேராம கிருஷ்ண பக்தர்கள் ரதயாத்திரை வடம் பிடித்து சென்றனர்.
நகரில் பல்வேறு வீதிகள் வழியாக ரத யாத்திரை சென்றது. பொதுமக்கள் ரதயாத்திரையினை வரவேற்றனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியான பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதர் இந்த ஜெகந்நாத ரத யாத்திரையை உலகம் முழுவதும் நடைபெறச் செய்தார்.
இந்த யாத்திரையில் மக்கள் அனைவருக்கும் தன் கருணை யை அளிப்பதற்காக பகவான் ஜெகந்நாதர் தாமே ரதத்தில் அமர்ந்தபடி ஊர் வலம் வருகிறார். புதுக்கோட்டை மையம் கீழ 2-ஆம் வீதியில் இந்த மையம் அமைந்திருக்கிறது. ISKCON இயக்கம் இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக ஏற்பாடு செய்திருந்தது.
ரங்கராமதாஸ் ISKCON புதுக்கோட்டை மையத்தில் பிரசாரம் சேவை செய்கிறார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ராதா கிருஷ்ணருக்கு ஆராதனை நாம சங்கீர்த்தனம், பகவத் கீதை உபன்யாசம் மற்றும் ஞாயிறு விருந்து (அன்னதானம்) நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராதாகிருஷ்ணரின் அருளைப்பெற ISKCON புதுக்கோட்டையிலுள்ள பக்தர்கள் அனைவரையும் வரவேற்பதாக புதுக்கோட்டையின் மண்டல மேலாளர் சதாசிவம் ISKCON தெரிவித்தார்