Close
நவம்பர் 22, 2024 9:03 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை போட்டிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி  மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறவுள்ளது.  திருவிழாவையொட்டி ஒன்றியம் மற்றும் நகராட்சி அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதம்பாள் அரசு மெல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் விவரம்: பேச்சுப் போட்டிகள்: 6,7,8 வகுப்புகளில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி உ.உதயரிஷினியா, மேல்மங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செ.வினித்தா, வேந்தன்பட்டி செயிண்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளி மாணவி செ.வினித்தா முறையே மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். 9, 10 வகுப்பில் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மாணவி ர.மகாநிவேதிதா, கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.ஹைனூல்இனாயா, நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ம.மதுமிதா ஆகியோர் வென்றுள்ளனர். 11, 12 வகுப்புகளில் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் நா.பீர்முகது, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் சு.சுகநிலவன், கரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி க.வதிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கவிதைப் போட்டி: செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுப.கார்த்திகா, கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி த.கலைச்செல்வி, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவன் செ.ஹரிரண் ஆகியோரும், 9, 10 வகுப்புகளில் மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ம.தேஷ்னாரோஸ், புதுக்கோட்டை மௌண்ட்சியோன் மெட்ரிக் .பள்ளி மாணவன் ம.ருத்ரவேல், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவன் பீ.முகமதுதாஹிர் ஆகியோரும் 11,12 வகுப்பில் ஆவுடையார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி க.ஹரிநந்தா, விராலிமலை விவேகா மெட்ரிக். பள்ளி மாணவன் செ.செந்தமிழ், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவி இரா.இந்துஜா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஓவியப்போட்டி: 6,7,8 பிரிவில் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜீ.அர்ச்சனா, உப்பிலியக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் ஜெ.முகேஷ், செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெகப்ரதாயினி ஆகியோரும் 9,10 பிரிவில் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவன் லெ.அவினேஷ், சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கா.காவ்யப்பிரியா ஆகியோரும் 11,12 வகுப்பில் குளத்தூர் வித்யாலயா மேட்ரிக் பள்ளி மாணவன் வீ.சா.ராஜாமுத்து, சிவபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் க.தருண்கிஷோர், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி ஆ.க.வேதா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு ஸ்ரீபிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன், மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து மற்றும் நிர்வாகிகள் மா.குமரேசன், ராமதிலகம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சிகளை மகா.சுந்தர் ஒருங்கிணைத்தார். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்க. மு.கீதா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top