Close
செப்டம்பர் 20, 2024 8:31 காலை

தஞ்சையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நவீன அரிசி ஆலைகளின் திறன் ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூரில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமுதுநிலை மண்டலமேலாளர் அலுவலக கூட்ட அரங்கில் நவீன அரிசிஆலைகளின் திறன் ஆய்வுக் கூட்டம் (14.07.2022) நடைபெற்றது.

தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழகநிர்வாக இயக்குனர் சு. பிரபாகர் ,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  முன்னிலையில் வகித்தனர்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்கதமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்ற 21 நவீன அரிசி ஆலைகளின் பணியாற்றுகின்ற பொறியாளர்கள் மற்றும் பணியாளர் களுடன் ஆய்வு கூட்டம்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,12 நவீன அரிசிஆலைகளில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர் தேக்கதொட்டி பழுது அடைந்துள்ளது. அதை புதிதாக அமைத்து தரவேண்டும் எனகோரிக்கை வந்தது. எனவே ஒவ்வொரு மேல்நிலைத் தொட்டிக்கும் 60 லட்சம் ரூபாய் வீதம் ரூபாய் 7 கோடியே 20 லட்சம் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு விரைவில் அந்தபணிகள் தொடங்கப்பட உள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. மானாமதுரையில் உள்ள அரிசி ஆலையை நவீனப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நூறு விழுக்காடு உற்பத்தி செய்யமுடியும் என தெரிவித்தனர். அதற்காகரூபாய் 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து நவீனஅரிசி ஆலை கட்டிடம் சீரமைக்க, 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஒருநவீனஅரிசிஆலைக்கும் கழிவுநீர் வசதியை மேம்படுத்தநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:  கருப்பு,பழுப்பு அரிசியை நீக்கும் இயந்திரம் 17 ஆலையில் உள்ளது.  மீதிஉள்ள 4 ஆலைகளுக்கு விரைவில் வசதி செய்து தரப்படும். தமிழ்நாட்டில் கடந்தஆட்சியில் 376 அரவை முகவர்கள் இருந்தனர். அதில், 106 பேர் கருப்பு, பழுப்பு அரிசியை நீக்கும் இயந்திரம் பொருத்தி இருந்தனர். இந்தியஉணவுக் கழகம் அதைஉத்தரவாக பிறப்பித்திருந்தது.  கடந்த அரசுஅதனை முழுமையாக பின்பற்றவில்லை. தற்போதைய  அரசு 376 அரவை முகவர்களை 638 ஆக உயர்த்திஉள்ளது. தற்போதுஅனைத்து இடங்களிலும், கருப்பு, பழுப்பு அரிசியை நீக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன.

எங்காவது குறைபாடு இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனஅரவை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு ள்ளது.  68 விழுக்காடு அரவை இருக்கவேண்டும். மூன்று ஷிப்ட்டுகள் இயக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதில் சிலசிரமங்கள் இருப்பதாக,அரவை முகவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பரிசீலித்து நிறைவேற்றப்படும்.

நெல் கொள் முதல் நிலையங்களில் புகார் பெட்டி:

புகார் பெட்டியில் வாயிலாக புகார் ஏதும் வந்தால்,யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 83 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டாலும் பரவாயில்லை,  தவறு நடக்கக் கூடாது என  முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.  எல்லா நெல் கொள்முதல் நிலையங்களிலும் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், புகார் தெரிவிக்க, தொலைபேசி எண்கள், இலவசஅழைப்பு எண்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

உணவுப் பொருள் வழங்கல் துறையில், குற்றங்களை தடுக்க கூடுதலாக எஸ்பி- டிஎஸ்பி நியமனம்:   முறைகேடுகள் தொடர்பாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமும் ஒத்துழைப்புகோரி உள்ளோம். எந்த அதிகாரி தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சிகாலத்தில் இருந்ததுபோல், வெளிமாவட்ட நெல்லை வியாபாரிகள் கொண்டு வந்துவிற்பனை செய்வதாக இதுவரை புகார் வரவில்லை.உணவுப் பொருள் வழங்கல் துறையில், குற்றங்களைதடுக்க கூடுதலாக எஸ்பி- டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தஆண்டு 40 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தஆண்டு இதைவிட 3 லட்சம் டன் அதிகமாக இருந்தது. அரசுபொறுப்பேற்றது முதல் மாவட்ட,மாநில எல்லைகளில் வரும் நெல்லை சோதனை செய்து, உரியஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கிறோம்.   நெல்லை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது. ஆவணங்கள் இல்லையென்றால் நெல் பறிமுதல் செய்யப்படும். இதில் எந்த தவறும் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் நெல் கொள்முதலிலும் எந்ததவறும் நடைபெறவில்லை.

இந்தஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களிலும், மாநிலம் முழுவதும் 50 இடங்களிலும், மகாத்மாகாந்தி தேசியவேலை உறுதித் திட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்டப்படும். நபார்டு வங்கியின் மூலமாக 100 இடங்களில் சொந்த கட்டிடத்தில் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குரூ 2500 குறைந்த பட்ச ஆதார விலை தருவதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றுவோம் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறைஅமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார்.

தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம்  தஞ்சாவூர் ஒன்றியம் மருதம் நகரில் செயல்படும் பொதுவிநியோகத் திட்டநுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் செயல்படும்  தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபகழகதிறந்தவெளி அரசு சேமிப்பு கிடையினையும், நீலகிரி தெற்கு தோட்டம் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபகழக அரசுசேமிப்பு கிடங்கினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக தஞ்சாவூர் இரயில் நிலையம் அருகே மாவட்டகுடும்பநல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகைதினத்தினை முன்னிட்டுஅமைச்சர்  அர. சக்ரபாணி விழிப்புணர்வு  பேரணியை தொடங்கிவைத்தார்.இந்தநிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்றஉறுப்பினர்  டி. கே. ஜி நீலமேகம்,துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடுநுகர்வோர் வாணிபகழகமுதல் நிலைமண்டல மேலாளர் நா. உமாமகேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top