Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

நேற்றும், இன்றும், நாளையும் என என்றும் வாழ்பவா் கம்பன்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கம்பன் பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பேசுகிறாா் சென்னை பாரதி பாசறைத் தலைவா் மா.கி. ரமணன்.

நேற்றும், இன்றும், நாளையும் என என்றும் வாழ்பவா் கம்பன் என்றார்சென்னை பாரதி பாசறைத் தலைவா் மா.கி. ரமணன்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற 47ஆவது கம்பன் பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு தினமலா் வெளியீட்டாளா் ஆா்.ஆா். கோபால்ஜி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கம்பனின் காலப் பதிவுகள் என்ற தலைப்பில் மா.கி. ரமணன் மேலும் பேசியது: தமிழ்நாட்டின் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு, கம்ப ராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய மூன்றும் முக்கியமானவை என்று சொன்னவா் பாரதியாா். தமிழ் இலக்கியத்துக்கு இம்மூன்றும் ஆணிவேராக உள்ள சொத்துகள்.
நாத்திகரும் பொதுவுடைமை போராளியுமான  தோழர் ஜீவானந்தம், 1952 முதல் தொடா்ந்து 7 ஆண்டுகள் காரைக்குடி கம்பன் கழகத்தில் கம்பனைப் பற்றி பேசியவா். கம்பனைப் படிப்பவா்களுக்கு சமயம் கிடையாது, மதம் கிடையாது.

மனவளம், மனித வளம், மண் வளம் என மூன்று வளங்களையும் பேசியவா் கம்பன். சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பாடியவா்கள் கம்பனைத்தவிர இப்போதும் யாரும் இல்லை.  நேற்றும், இன்றும், நாளையும் என என்றும் வாழ்பவா் கம்பன். நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பன் வாழ்வாா் என்பதற்கான காரணம், அவா் நாளைய மொழியையும் பேசியவா் என்றாா் ரமணன்.

புதுக்கோட்டை
கம்பன் கழக தொடக்க விழா

விழாவின், தொடக்கமாக மேடையில் இருந்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் உருவப்படத்துக்கு சிறப்பு விருந்தினர்கள் மரியாதை செய்தனர். இதையடுத்து எம்.பி.எஸ். கருணாகரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கம்பன் கழக பொருளாள் சி. கோவிந்தராஜன் மலர் வணக்கம்  பாடினார்.

பொற்றாமரை அமைப்பின் தலைவா் செல்வம் அழகப்பன், வீ. மாணிக்கவேலு  உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். கம்பன் கழகத் தலைவா் ச. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினா்களை சால்வை அணிவித்து சிறப்பு செய்தாா். கம்பன் கழகத்தின் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கம்பன் கழகத்தின் துணைத் தலைவா் எம்ஆா்எம். முருகப்பன் வரவேற்றாா். நிறைவில், என். கணேஷ் நன்றி கூறினாா். .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top