Close
நவம்பர் 22, 2024 6:18 மணி

தஞ்சையில் 11 நாள் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர்

தஞ்சாவூர் நடைபறும் புத்தக திருவிழாவை தொடக்கி வைத்து பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரண்மனை வளாகத்தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்துநடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாவினை  பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசுதலைமை கொறடா  கோவிசெழியன் ,தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் .எஸ்.எஸ் .பழனிமாணிக்கம் ஆகியோர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் (15.07.2022) தொடங்கி வைத்தனர்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில்  (15.07.2022) முதல் (25.07.2022) வரை 11 நாட்கள் மாவட்டநிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் ஐந்தாவது புத்தகத் திருவிழா தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தபுத்தகத் திருவிழாவில் 100 அரங்கங்கள் 50 ஆயிரம் தலைப்புகளுக்கு மேல் நூல்கள் இடம் பெற்றுள்ளன.மேலும் 34 உணவு அரங்கங்கள்,விளம்பரதாரர் அரங்குகள், அரசுத்துறை அரங்குகள் எனமொத்தம் 134 அரங்குகள் அமைந்துள்ளது.

இந்த புத்தகதிருவிழா தினமும் காலை 10 மணிக்குதொடங்கி இரவு 9 மணிவரை நடைபெறும். காலை 11 மணிமுதல் மதியம் 1 மணி வரைபள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்கிறது.

குறிப்பாக வருகின்ற 24.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெறும் நூல் அறிமுக போட்டியில் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் பாகம், சாண்டில்யனின் கடல்புறா, அப்துல் கலாமின் அக்னிசிறகுகள், சா. கந்தசாமியின் சாயாவனம், கி.ராஜநாராயணனின் கோபாலபுரத்து மக்கள்,பாலகுமாரனின் உடையார், சு.வெங்கடேசனின் வீரயுகநாயகன் வேள்பாரி.

சுகிசிவத்தின் நீநான் நிஜம், அறிஞர் அண்ணாவின் செவ்வாழை, கலைஞர் மு.கருணாநிதியின் ஒரே ரத்தம், எனிட் ப்ளைட்டனின்  (ஆங்கிலநாவல்) மற்றும் ஹரி பாட்டர் ஆகிய நாவல்கள் குறித்து 3-5 நிமிடங்கள் அறிமுகம் செய்ய வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு சிறப்புபரிசு வழங்கப்படும் .தினமும் மாலை 4 மணிமுதல் 6 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து  வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நகைச்சுவை – சிந்தனைஅரங்கம் நடக்கிறது.நகைச்சுவை-சிந்தனை அரங்கத்தில் தொலைக்காட்சி புகழ் கோபிநாத் கலந்து கொண்டு வீடுவரை உறவு என்ற தலைப்பில் பேசினார்.

 (சனிக்கிழமை) வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவதிலா அல்லது பெறுவதிலா என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.  17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்ல பொழுதையெல்லாம் என்ற தலைப்பில் சுகி. சிவமும், கெஞ்சலும், மிஞ்சலும் என்றத லைப்பில் சண்முகவடிவேலும் பேசுகின்றனர்.

18-ந்தேதி மானுடம் வெல்லும் என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கமும், வாழ்க்கையை வாசிப்போம் என்ற தலைப்பில் அருள்பிரகாசும், 19-ந் தேதிபுத்தகம் என்னும் போதிமரம் என்ற தலைப்பில் மணிகண்டனும், சிந்தனைசெய் மனமே என்ற தலைப்பில் செந்தூரனும், 20-ந் தேதி அன்பேஅறம் என்ற தலைப்பில் மோகனசுந்தரமும், பார்த்துக்கலாம் என்ற தலைப்பில் சுந்தரஆவுடையப்பனும் பேசுகின்றனர்.

21-ந் தேதி ஒருசொல் என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானாவும், தெம்புக்குபடிங்க என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கமும், 22-ந் தேதி வரலாறு முக்கியம் என்ற தலைப்பில் பாரதிபாஸ்கரும், திருக்குறளில் மேலாண்மை என்ற தலைப்பில் ஜெயம்கொண்டானும்,  23-ந் தேதி கல்வியே செல்வம் என்ற தலைப்பில் ஞானசம்பந்தமும், குறள் எடு, குறைவிடு என்ற தலைப்பில் தாமோதரனும் பேசுகின்றனர்.

24-ந் தேதி சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது கனிந்தமனமே, நிறைந்த பணமே என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி குழுவினரின் பட்டிமன்றமும், 25-ந் தேதி பேசும் புத்தகம் என்ற தலைப்பில் தொலைக்காட்சிபுகழ் ஈரோடு மகேஷ் பேசுகின்றார்.

இதுபோன்று பல்வேறு தொடர் நிகழ்வுகளும் இந்த 11 நாள் நடைபெறுகிறது. எனவே நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர்

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் சில்லறை மீன் விற்பனையினை ஊக்குவித்திட ஏதுவாக 40 மானியத்தில் குளிர் காப்பி பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் 16 மீனவபயனாளிகளுக்கு ரூபாய் 11.79 லட்சம் மதிப்பீட்டில்  பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி  வழங்கினார்.

இவ்விழாவில் திருவையாறு  சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்,    கும்பகோணம் மாநகராட்சி மேயர்  க. சரவணன்,துணைமேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சு.ப.தமிழழகன் (கும்பகோணம்),மாவட்டஊராட்சிதுணைத் தலைவர்  எஸ். கே .முத்து, பபாசி தலைவர்  எஸ் .வயிரவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top