Close
செப்டம்பர் 20, 2024 4:13 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுரங்கம்- பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி- வினா போட்டிகள்: இணைய தளம் வாயிலாக இன்று(ஜூலை21) நடக்கிறது

புதுக்கோட்டை

செஸ் மற்ற விளையாட்டு தொடர்பாக வினாடி வினா போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுகிறது

 மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான இணையதளம் வாயிலான வினாடி வினாப் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 21.07.2022  நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினாப்போட்டிகள் இணையதளம் வாயிலாக 21.07.2022  மாலை 06.00 மணியளவில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் https://pudukkottai.nic.in/state-level-interschool-quiz/   என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

மேற்காணும் போட்டிகளில் வெற்றிபெறும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த 5 நபர்களும், பிற மாவட்டங்களை சார்ந்த 5 நபர்களும் என மொத்தம் 10 நபர்கள் தரவரிசையின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் 24.07.2022 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நேரடியாக பங்கேற்று விளையாடவுள்ளனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படுவதுடன், இறுதிப் போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை வருகை தரும் வெளி மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மற்றும் உடன் வரும் பெரியவர் ஒருவருக்கு தொலைவின்  அடிப்படையில் பயணப்படி வழங்கப்படும்.

எனவே சதுரங்கப் போட்டிகளில் விளையாட ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொண்டோ அல்லது https://pudukkottai.nic.in/state-level-interschool-quiz/-என்ற இணைய தள முகவரியில் நடைபெறும் போட்டியில் நேரடியாகவோ பங்கேற்கலாம்.

மேலும் இப்போட்டியில் சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான 30 வினாக்களுக்கு 15 நிமிடங்களில் விடையளிக்கும் வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top