Close
செப்டம்பர் 20, 2024 5:55 காலை

புதுக்கோட்டை காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் ராக்கி மரணம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை காவல்துறையில் பணியாற்றிய மோப்பநாய் மரணம்

நாட்டின் பல்வேறு பாதுகாப்புபணிகளில் வெடிபொருள் சோதனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் ராக்கி  உடல் நலக்குறைவால் மரணமடைந்தது.

புதுக்கோட்டை, ஆயுதப் படைவளாகத்தில் உள்ள துப்பறியும் மோப்பநாய் பிரிவில் ராக்கி என்ற மோப்பநாய் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்தபோது, குடியரசு தலைவர், குடியரசுதுணைதலைவர், உள்துறை  அமைச்சர், நிதிஅமைச்சர், ஆளுநர், தமிழக முதலமைச்சர் ஆகியோரின் பாதுகாப்பு பணிகளில் வெடிபொருள்சோதனைசெய்யும் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளது. குறிப்பாக முன்னாள் குடியரசுதலைவர் அப்துல் கலாம்  நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பணிபுரிந்துள்ளது.

மேலும் சென்னைமற்றும் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாமற்றும் குடியரசு தினவிழாவில் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாகபணிபுரிந்துள்ளது. இந்நிலையில், வயது முதிர்வின் காரணமாக கடந்த 13.12.2021-ஆம் தேதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மோப்பநாய் பிரிவில் பராமரிக்கப்பட்டுவந்தது.

கடந்த 13.07.2022-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்  திருக்கோகர்ணம் அரசுகால்நடைமருத்துவரிடம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில்,  21.07.2022-ம் தேதி அதிகாலை சுமார் 04.00 மணியளவில் இயற்கையான முறையில்  உயிரிழந்தது. ராக்கி மோப்ப நாயின் பிரேத பரிசோதனைக்குபின்பு ஆயுதப்படைவளாகத்தில் அமைந்துள்ள மோப்பநாய் பிரிவு வளாகத்திற்குள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசுமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top