Close
செப்டம்பர் 20, 2024 6:30 காலை

குரூப்-4 தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 40,871 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுகை சிவபுரம் ஜெ.ஜெ கல்லூரியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி – 4  தேர்வில் 40,871 நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்றையதினம் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி -4  பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 161 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள. 186 தேர்வு மையங்களில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்வினை 40,871 நபர்கள் எழுதினர். 6,808 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.

தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. இத்தேர்வினை 186 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 59 சுற்றுக்குழு அலுவலர்களும், 25 பறக்கும் படை அலுவலர்களும், 186 ஆய்வு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது.

இத்தேர்வு நிகழ்வுகளை 197 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, சுமுகமான முறையில் தேர்வுகள் நடைபெற்றன என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை
பொன்னமராவதி உள்ள தேர்வு மையத்தை பார்வையிட்ட டிஆர்ஓ செல்வி

மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி,  பொன்னமராவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஜெ.ஜெ. அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி -4  தேர்வை  (24.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top